SuperTopAds

அடுத்த 48 மணிநேரத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு!!

ஆசிரியர் - Editor III
அடுத்த 48 மணிநேரத்தில் கடும் மழைக்கு வாய்ப்பு!!

தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி,  வெப்பச்சலனம் காரணமாக இனிவரும் 48 மணிநேரத்தில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தள்ளது. 

குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாகத் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் 7 சென்டி மீற்றரும்,  கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.