SuperTopAds

ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார் பிரணாப்!! -தகவல் வெளியிட்ட வைத்தியசாலை-

ஆசிரியர் - Editor III
ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார் பிரணாப்!! -தகவல் வெளியிட்ட வைத்தியசாலை-

இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என்று இராணுவ மருத்துவமனை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் டெல்லி இராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்:- பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தற்போது ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.