SuperTopAds

கொரோனா அமளிக்குள் பிளைப்பு நடத்தும் தனியார் வைத்தியசாலைகள்!! -ஒரு கோடிக்கும் அதிக கட்டணம் வசுலிப்பு-

ஆசிரியர் - Editor III
கொரோனா அமளிக்குள் பிளைப்பு நடத்தும் தனியார் வைத்தியசாலைகள்!! -ஒரு கோடிக்கும் அதிக கட்டணம் வசுலிப்பு-

தானேயில், 17 தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா நோயாளிகளிடம் ரூ.1.82 கோடி அதிக கட்டணம் வசூலித்தது அம்பலம்

தானேயில் உள்ள 17 தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளிடம் ஒரு கோடியே 82 இலட்சம் ரூபாவிற்கு அதிகமாக கட்டணம் வசூலித்தது அம்பலமாகி உள்ளது.

அங்குள்ள தனியார் வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்த மாநகராட்சி மன்றம் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவினர் அதிக கட்டணம் வசூலிப்பதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட 17 தனியார் வைத்தியசாலைகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளிடம் ஒரு கோடியே 82 இலட்சம் ரூபா வீதம் அதிக கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.