சிறுவனின் உயிரை பறித்த வைத்தியரின் அலட்சியம்!! -நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor III
சிறுவனின் உயிரை பறித்த வைத்தியரின் அலட்சியம்!! -நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு-

வைத்திய சாலையில் தொடர்ந்து 10 நாட்களாக சிகிச்சைபெற்றுவந்த சிறுவன் ஒருவன் வைத்தியரின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் குறித்த வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக 12 இலட்சம் ரூபா இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 

மும்பையை சேர்ந்தவர் லியோ, நான்சி தம்பதிகளின் 2 வயது மகனான இசிஸ் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி கடுமையான காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டதால் பைகுல்லாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 

10 நாளாக அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் வைத்தியர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தங்களது மகன் உயிரிழந்ததாகவும், இதற்காக இழப்பீடு கேட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு 12 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கும்படி வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் வைத்தியர்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.