SuperTopAds

31 இலட்சத்தைக் கடந்தது கொரோனா!!

ஆசிரியர் - Editor III
31 இலட்சத்தைக் கடந்தது கொரோனா!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 இலட்சத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 61,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 31 இலட்சத்து 6 ஆயிரத்து 349 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளுக்கு 7 இலட்சத்து 10 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 57,468 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இதுவரை 23 இலட்சத்து 38 ஆயிரத்து 36 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். ஒரே நாளில் 836 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 57,542 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

நாட்டில் கொரோனா பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன. நேற்று 6,09,917 கொரோனா பரிசோதனைகள் நடந்தன.  இதன்மூலம் இது வரையில் 3 கோடியே 59 இலட்சத்து 2 ஆயிரத்து 137 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.