SuperTopAds

வீட்டில் திருமண ஏற்பாடு!! -மணமகன் தூக்கில் தொங்கி தற்கொலை-

ஆசிரியர் - Editor III
வீட்டில் திருமண ஏற்பாடு!! -மணமகன் தூக்கில் தொங்கி தற்கொலை-

வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டுவந்த நிiலியல் மணமகன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டத்தை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 30) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். 

இறந்தவரின் அண்ணன் சிலாவட்டம், மதுராந்தகம், அருங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நபர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தி பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருந்தார். 

அந்த சீட்டுக்கு பணம் கட்டியவர்கள், சீட்டு பணத்தை செந்தில்நாதனிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். இதனால் அவமானம் தாங்க முடியாத செந்தில்நாதன் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு கொண்டார். 

தற்கொலை செய்து கொண்ட செந்தில்நாதனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.