கொரோனாவால் நிலைகுலையும் இந்தியா!! -ஒரு நாளில் 10 இலட்சம் பேருக்கு பரிசோதனை-
கொரோனாவை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலையும் இந்தியாவில் ஒரு நாளுக்கு 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனாவால் 983 பேர் பலியாகியுள்ளனர். இதன்படி அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது,
மேலும் இந்தியாவில் முதன்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கு மேல் கொரோனா பரிசோதனைகள் நடந்து உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று கடந்த 21 நாட்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் ஏறக்குறைய 100 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
கடந்த முதலாம் திகதி கொரோனா பாதிப்புகளில் இருந்து 10 இலட்சத்து 94 ஆயிரத்து 374 பேர் குணமடைந்து இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 21 ஆம் திகதி 21 இலட்சத்து 58 ஆயிரத்து 946 ஆக அதிகரித்து உள்ளது. சீராக இந்த எண்ணிக்கையானது உயர்ந்து வந்துள்ளது.