வயலில் இறங்கி உழவில் ஈடுப்ட எம்.எல்.ஏ!! -குவியும் பாராட்டுக்கள்-
வயலில் இறங்கி உழவு பணியில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கனமழையை அடுத்து விவசாய பணிகளை விவசாயிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், எம்.எல்.ஏ., மனோகர் ரந்தாரி, தனக்கு சொந்தமான, 25 ஏக்கர் பண்ணை நிலத்தில், கடந்த சில நாட்களாக தானே உழவு செய்து வருகிறார்.
இவருடைய மனைவி, அரசு ஊழியராக பணியாற்றுகிறார். தினமும் காலை 5 மணிக்கு மனைவியுடன், வயலுக்கு வந்து விடுகிறார். காலை, 10 மணி வரை, மனைவியுடன் சேர்ந்து வயலில் உழவு பணிகளை மேற்கொள்கிறார்.
இதன்பின் மனைவி அலுவலகத்துக்கு செல்கிறார். எம்.எல்,ஏ மட்டும் மதியம் 12 மணி வரை உழவு வேலை செய்து விட்டு வீடு திரும்புகிறார். நிலத்தில் தானே உழவு செய்யும் எம்.எல்.ஏ ரந்தாரியை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.