SuperTopAds

கோமாவில் பிரணாப்: நுரையீரலும் சிக்கலில்!! -சோக தகவல் வெளியிட்ட வைத்தியசாலை-

ஆசிரியர் - Editor III
கோமாவில் பிரணாப்: நுரையீரலும் சிக்கலில்!! -சோக தகவல் வெளியிட்ட வைத்தியசாலை-

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து செல்கின்றது என்று அவர் சிகச்சை பெற்றுவரும் இராணுவ வைத்தியசாலை தகவல் தெரிவித்துள்ளது.

அவருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 10 ஆம் திகதி அவர் டெல்லியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார். 

தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் அபிஜித் முகர்ஜி இன்று புதன்கிழமை காலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

இருப்பினும் அவருடைய உடல் நலம் மேலும் மோசமடைந்துள்ளதாக இராணுவ வைத்தியசாலை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் இராணுவ வைத்தியசாலை தெரிவித்துள்ளது.