60 ஆயிரம் ரூபாய்க்கு அங்கலாய்த்த இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர்..! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கையும் களவுமாக சிக்கினார்..
இ.போ.ச வடபிராந்திய முகாமையாளர் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மன்னார் இ.போ.ச சாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இ.போ.ச ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் விடுவதற்காக 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறும்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.