50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஞாயிறு வெளியிடப்படுகிறது..! ஜனாதிபதி செயலக இணைய தளத்தில்..

ஆசிரியர் - Editor I
50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஞாயிறு வெளியிடப்படுகிறது..! ஜனாதிபதி செயலக இணைய தளத்தில்..

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் உள்வாங்கப்பட்டிருக்கும் பட்டதாரிகளுடைய பெயர்கள் நாளை மறுதினம் ஞாயிற்று கிழமை ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ள பட்டதாரிகள் எதிர்வரும் 01 ஆம் திகதி தொடக்கம் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பட்டதாரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் செயற்றிட்டத்தை 

உடனடியாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்தல் காரணமாக தொழில் வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று கடந்த பெப்ரவரி மாதம் தெரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளை பணிக்கு அமர்த்துவதற்காக நீண்டகால அபிவிருத்தி செயலணியும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு