SuperTopAds

மூளைச்சாவடைந்த பிரணாப்!! -உடல் நிலையில் முன்னேற்றமில்லை-

ஆசிரியர் - Editor III
மூளைச்சாவடைந்த பிரணாப்!! -உடல் நிலையில் முன்னேற்றமில்லை-

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றம் இல்லை என டெல்லி இராணுவ மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

84 வயதான அவர் கடந்த 9 ஆம் திகதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இருந்ததால் ஆர்.ஆர்.இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மூளையில் இரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்ததால், வைத்தியர்கள் அறுவை சிகிச்சை செய்து இரத்த கட்டியை அகற்றினர். 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

இதற்கிடையே, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்நலையில் அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசம் அடைந்தது. மேலும் நேற்று காலை அவர் நினைவிழந்து ஆழ்ந்த கோமா நிலையை அடைந்தார்.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்று மருத்துவமனை இன்று காலை தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.  தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து செயற்கை சுவசாச கருவியின் உதவியுடன் உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.