1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு மற்றும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு..! திகதியை அறிவித்தது ஜனாதிபதி செயலகம்..

ஆசிரியர் - Editor I
1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு மற்றும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு..! திகதியை அறிவித்தது ஜனாதிபதி செயலகம்..

1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு மற்றும் 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு செப்ரெம்பர் மாதம் 1ம் திகதி நடைமுறைக்குவரும் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சௌபாக்கியத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல் என்ற குறிக்கோளை அடையும் நோக்கத்துடன் 

குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த கல்வி பொது தராதர சாதாரண தரத்திலும் பார்க்க குறைந்த கல்வி தரத்தைக் கொண்ட ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

பலநோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் தொழில்வாய்ப்பைப் பெறவுள்ளளோருக்கு 6 மாத தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. 

இதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற்று முடிந்தது.அவர்களுக்கான பயிற்சிகள் வரும் செப்ரெம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

தேவேளை, 50 ஆயிரம் பட்டதாரி அரச சேவைக்குள் இணைக்கும் திட்டத்தில் அவர்களுக்கான பயிலுனர் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

அவர்களுக்கான நியமனம் செப்ரெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி செயலகம் இன்று அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு