மாதிரி வாக்கு சீட்டுக்களுடன் ஈ.பி.டி.பி வேட்பாளர் உட்பட 4 பேர் கைது..! தேர்தல் ஆணைக்குழு, பொலிஸார் அதிரடி..

ஆசிரியர் - Editor
மாதிரி வாக்கு சீட்டுக்களுடன் ஈ.பி.டி.பி வேட்பாளர் உட்பட 4 பேர் கைது..! தேர்தல் ஆணைக்குழு, பொலிஸார் அதிரடி..

மாதிரி வாக்கு சீட்டுக்களுடன் நடமாடிய ஈ.பி.டி.பி வேட்பாளர் ஒருவர் உட்பட 4 பேர் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

இந்த சம்பவம் முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் மாதிரி வாக்கு சீட்டக்களுடன் சிலர் நடமாடுவதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து, 

பொலிஸார் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டிருந்த நடவடிக்கையில் ஈ.பி.டி.பி வேட்பாளர் ஒருவருடன் ஆதரவாளர் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர், பொதுஜன பெரமுன ஆதரவாளர் ஆகிய 4 பேர்

கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Radio