இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக கடத்தப்பட்ட 1000 கிலோ மஞ்சள்..! கடத்தல்காரன் தனிமைப்படுத்தலில், மஞ்சள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது..

ஆசிரியர் - Editor
இந்தியாவிலிருந்து மன்னார் ஊடாக கடத்தப்பட்ட 1000 கிலோ மஞ்சள்..! கடத்தல்காரன் தனிமைப்படுத்தலில், மஞ்சள் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது..

இந்தியாவிலிருந்து மன்னார் வழியாக இலங்கைக்குள் 1000 கிலோ மஞ்சள் கடத்திவந்தவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மன்னார் - சிலாவத்துறை பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். கடற்கரையிலிருந்து வண்டி ஒன்றினூடாக 

மஞ்சளைக் கொண்டு சென்ற போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 20 மூடைகளில் பொதியிடப்பட்ட நிலையில் 

இவை பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். மஞ்சளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவதற்காக

மன்னார் பொது சுகாதார பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட 1000 கிலோகிராம் மஞ்சளை 

யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.