விஜயலட்சுமி தற்கொலை முயற்சி!! -அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
விஜயலட்சுமி தற்கொலை முயற்சி!! -அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி-

இளைய தளபதி விஜயின் வெற்றிப்படங்களின் ஒன்றான ப்ரண்ட்ஸ் படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவர் சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கண் விழித்த பின் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை போலீசார் விசாரிக்க இருக்கிறார்கள். தற்கொலை முயற்சி செய்யும் முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Radio