SuperTopAds

மன்னார் மாவட்டத்தில் பாரிய மத முறுகல் நிலைய உருவாக்க சதி..! மாவட்ட தேர்தல் அதிகாரி சைபர் குற்றங்களுக்கான பொலிஸாரிடம் புகார்..

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்டத்தில் பாரிய மத முறுகல் நிலைய உருவாக்க சதி..! மாவட்ட தேர்தல் அதிகாரி சைபர் குற்றங்களுக்கான பொலிஸாரிடம் புகார்..

மன்னார் மாவட்டத்தில் மத முறுகலை உண்டாக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் வட்சப், வைபர் போன்ற செயலிகள் ஊடாகவும் கருத்துக்கள், ஒலிப்பதிவுகள் பரப்பபடுவதாக சைபர் கிறைம் பிரிவில் மன்னார் மாவட்ட தேர்தல் அதிகாரி முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார். 

மன்னார் மாவட்டத்தினை மையமாக்கொண்டு எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஓர் அணியின் பெயரில் சமய விடயங்களை மையம் சார்ந்து வெறுப்புகளை ஏற்படுத்துவதற்காக தேர்தல் விதிமுறைகளை மீறிய வகையில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.

இதன் காரணமாக மத முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளமையினால் அதனை கண்டறிவதற்கும் பதிவேற்றம் செய்தவர்களை உறுதி செய்நும் வகையிலும் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இதன் ஆதாரங்களும் திரட்டப்பட்டு சம்ப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு திரட்டப்பட்ட விபரங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.