தந்தைக்கு கொரோனா!! -விசாலும் தனிமைப்படுத்தலில்-

ஆசிரியர் - Editor II
தந்தைக்கு கொரோனா!! -விசாலும் தனிமைப்படுத்தலில்-

நடிகர் விசாலின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை நடிகர் விசால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்து உறுதிப்படுத்தியுள்ளார். 

குறிப்பாக தமக்கும் அதிக காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள விசால், தமது மேலாளருக்கும் இதே நிலை தான் என தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போது பேரும் தனிமைப் படுத்திக் கொண்டு ஆயுர்வேத மருந்து எடுத்து வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும்,  தற்போது நலமாக உள்ளதாகவும் நடிகர் விசால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் நடிகர் விசால்  தெரிவித்துள்ளார்.

Radio