SuperTopAds

கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரம்..! ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட முன்னாள் போராளி கண்ணதாசன் விடுதலை...

ஆசிரியர் - Editor I
கட்டாய ஆட்சேர்ப்பு விவகாரம்..! ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட முன்னாள் போராளி கண்ணதாசன் விடுதலை...

ஆயுள் தண்டணை  விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளி கண்ணதாசன் மேன்முறையீட்டு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் வவுனியா மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் ஆயுட் தண்டணை விதிக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பினை எதிர்த்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் குறித்த வழக்கின் விளக்கம் சட்டத்தரணி சுமந்திரனால் எழுத்தில் 

வழங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 13ம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வாறு கண்ணதாசனால் மேன்முறையீடு செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில் 

வவுனியா மேல் நீதிமன்றினால் வழங்கபட்டுள்ள தீர்ப்பினை நியாயப்படுத்த முடியவில்லை என்றும் அதனால் மீண்டும் விசாரணை வேண்டும். என அன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான 

பிரதி மன்றாடியார் குமார்ரட்ண கோரிகை முன்வைத்து அதற்கு இணக்கம் கோரினார். ஏற்கனவே இடம்பெற்ற விசாரணையை நியாப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் 

குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட வேண்டுமே அன்றி மீள் விசாரணைக்கு இணங்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். 

இதேநேரம் அன்றைய தினம் குற்றவாளியும் மன்றுக்கு அழைத்துவரப்பட்டிருக்கவில்லை. அதனால் குற்றம் சாட்டப்பட்டவரையும் அழைத்துவருமாறும் மீள் விசாரணையா அல்லது விடுதலையா என்பதனை அன்றைய தினம் தெரிவிப்பதாக கூறி 

குறித்த வழக்கு இன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியங்க பெனான்டோ ஆகியோர் 

கண்ணதாசன் குற்றவாளியாக காணப்பட்டதையும் அவருக்கு வழங்கிய தண்டனையினையும் இரத்துச் செய்வதோடு இந்த நிலையில் வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து 

விடுதலை செய்வதோடு சட்டமா அதிபர் தீர்மானித்தால் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யலாம் என தீர்ப்பளித்தனர்.