பெற்றோரின் அசண்டையீனம்..! 8 வயது சிறுமியுடன் தகாதமுறையில் நடந்த 12, 14 வயது சிறுவர்கள், 14 வயது சிறுவனின் தொலைபேசியில் ஆபாச தேடல்கள்..
8 வயதான சிறுமியிடம் தகாதமுறையில் நடந்த 12வயது மற்றும் 14 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு- விசுவமடு பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த பகுதியில் உள்ள ஆலய திருவிழாவின்போது சிறுமியை ஒதுக்கு புறமாகமாக கூட்டிச்சென்ற சிறுவர்கள் மிக தவறான முறையில் நடந்து கொண்டிருக்கின்றனர்.
இதனை அவதானித்த பொதுமக்கள் சிலர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்குவந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சிறுவர்களை அழைத்து சென்றிருக்கின்றனர்.
இதன்போது நடத்தப்பட்ட சோதனையில் 14 வயது சிறுவனிடம் கைதொலைபேசி ஒன்று இருந்துள்ளது. அதில் கூகிள் மூலம் பாலியல் தொடர்பான விடயங்கள் தேடப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
பாடசாலைகள் நடைபெறாத நிலையில் இணைய வழி கற்பித்தல்- கற்றலுக்காக குறித்த சிறுவனுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட தொலைபேசியே மிக தவறானமுறையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதேவேளை சிறுவனை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொலிஸார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அனுமதித்திருக்கின்றனர்.
பெற்றோரின் மிக மோசமான அசண்டையீனமே இதற்கு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.