தமிழீழ விடுதலை புலிகளுக்கு பின்னய தமிழ்தேசியம் சிதைந்து கொண்டிருக்கிறது..! ரவிகரன் ஆதங்கம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகளுக்கு பின்னய தமிழ்தேசியம் சிதைந்து கொண்டிருக்கிறது..! ரவிகரன் ஆதங்கம்..

தமிழீழ விடுதலை புலிகளுக்கு பின்னய தமிழ்தேசியம் சிதைந்து கொண்டிருப்பதாக கூறியிருக்கும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையினையும், 

தற்போதுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் அதனை உணரக்கூடியதாகவிருக்கும். இவ்வாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் 

அமைந்துள்ள ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில், 18.07நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மேலும் வெளிநாட்டு சக்திகளோ, 

அல்லது அரசாங்கமோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன்தான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள்.வேறு கட்சிகளில் இருந்து ஓரிரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்படலாம். 

அவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர்கள் மூலம் எமது தமிழ் மக்களுக்கு தீர்கள் ஏதும் பெற்றுத்தர முடியாது.சர்வதேச மயப்படுத்தப்பட்ட எமது பிரச்சினையினை கையாளக்கூடிய திறன், எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கே உண்டு.

எனவே நாம் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்.அரச கட்சிகளோடு இணைந்துள்ளவர்களுக்கும், ஏனைய கட்சிகளுக்கும் வாக்களிப்பதைத் தவிர்க்கவேண்டும்.அவ்வாறு வேறு கட்சிகளுக்கு வாக்களித்தால், 

வன்னியில் உள்ள இரண்டு இலட்சத்து இருபதாயிரம் தமிழ் வாக்குகள் சிதைவடையக் கூடிய நிலையே ஏற்படும்.கொழும்பிற்கு அடுத்தபடியாக வன்னி தேர்தல் தொகுதியிலேயே அதிகப்படியான வேட்பாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

குறிப்பாக 477பேர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் நிராகரிக்கப்பட்டவர்களைத் தவிர்த்து தற்போது 405வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதிலே 350பேர் தமிழர்கள் களமிறங்கியுள்ளனர்.

எனவே எமதுதமிழ் வாக்குகள் பாரிய அளவில் சிதைவடையக்கூடிய வாய்ப்புக்களே அதிகம்காணப்படுகின்றன. வன்னித் தேர்தல் தொகுதியில் இருபத்தேழாயிரம் வாக்குகளை வைத்துள்ள சிங்களவர் இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் 

பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது.வரலற்றில், 1977ஆம் ஆண்டு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டதைப்போன்று, 1961ஆம் ஆண்டு அம்பாறையில் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டதைப்போன்று, 

2020இல் வன்னித் தேர்தல் தொகுதியில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் தேர்வுசெய்யப்படப்போவதற்கு, எமது தமிழ் மக்களின் வாக்குச் சிதைவு காரமாக அமையப்போகின்றது.கடந்தகாலங்களில் விடுதலைப்புலிகள் 

தமிழ் மக்களின் ஒற்றுமையின் நிமித்தம், பல கட்சிகளை ஒன்றிணைந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை உருவாக்கினர்.அவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்படும்போது, ஏனைய ஆயுத இயக்கங்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் 

இடையில் முரண்பாடுகள் இருந்தன.இருப்பினும் அவர்கள் தமிழர்களுடைய ஒற்றுமையின் நிமித்தம் அவற்றை அந்த முரண்பாடுகளை மறந்து ஏனைய ஆயுத இயக்கங்களை கூட்டமைப்பில் கூட்டுச்சேர்த்திருந்தனர்.

எனவே தமிழ் மக்கள் அனைவரும், தமிழர்களின் ஒற்றுமையின் அவசியத்தினை உணர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும் - என்றார்.இத் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பெருந் திரளான பொதுமக்கள் கலந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு