தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, ஹூல் மன்னாருக்குப் பயணம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர், இன்று காலை மன்னாருக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
இன்று காலை மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்குச் சென்றிருந்த இவர்கள், மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஜெனிற்றனுடன் கலந்துரையாடியுள்ளனர்.
அதனையடுத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான வாக்கு வீத அதிகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட வீதி நாடகத்தையும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பார்வையிட்டுள்ளார்.