கொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்கும்..! மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..

ஆசிரியர் - Editor I
கொரோனா 2ம் அலை வடக்கு மாகாணத்தை தாக்கும்..! மக்கள் சுகாதார நடைமுறைகளை உதாசீனம் செய்தால் விளைவுகள் மோசமாகலாம்..

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ம் அலையின் முதல் பகுதி ஆரம்பித்திருக்கும் நிலையில் வடக்கு மாகாணத்திலும் அதன் தாக்கம் உணரப்படும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.யமுனானந்தா கூறியிருக்கின்றார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமகாணாத்தில் கொரோணாவின் இரண்டாம் அலை பரவகடகூடிய ஏது நிலை உள்ளது. மக்கள் இது தொடர்பில் விழப்பாக இருக்கவேண்டும்.சமூக இடைவெளியினை பேணாதா காரணத்தால் இதன் தாக்கம் ஏற்படக்கூடிய நிலை உருவகலாம். 

இதனால் பொதுமக்கள் ஒன்று கூடுதல், தேவையற்ற பிரயாணங்களை தவிர்க்க வேண்டும்.இதனை கட்டுப்பத்த மருத்துவர்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோணா தொற்று தொடர்பில் ஆராயும் மூலக்கூற்று பரிசோதனை 

தினம் தோறும் மேற்கொள்ளப்படுகிறது. தினமும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து நாளாந்தம் 50- 90 வரையானவர்களின் மாதிரிகள் பரிசோதணைக்கு உட்படுத்தப்படுகின்றன. பொது மக்கள் முக கவசங்களை கட்டாயமாக அணிய வேண்டும். மேலும் சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு