SuperTopAds

ஆடு மேய்க்க சென்ற 20 வயதான இளைஞன் மீது இராணுவம் தாக்குதல்..! தாக்குதல் நடத்திய இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
ஆடு மேய்க்க சென்ற 20 வயதான இளைஞன் மீது இராணுவம் தாக்குதல்..! தாக்குதல் நடத்திய இராணுவத்தினருக்கு எதிராக வழக்கு தாக்கல்..

மாங்குளம் காட்டு பகுதியில் ஆடு மேய்க்க சென்றிருந்த 20 வயதான இளைஞன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் படையினருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கின்றது. 

மாங்குளம் காட்டுப்பகுதிக்கு கடந்த வாரம் ஆடுகள் மேய்ப்பதற்காக சென்ற 20 வயது இளைஞரை படையினர் தாக்கிய பின்னர் மாங்குளம் வன இலகா பாதுகாப்புப்பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர். 

இந்நிலையில் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்ட குறித்த இளைஞன் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் தனது எழுத்து மூலமான முறைப்பாட்டினை மேற்கொண்டார். 

இதைடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின்போது இளைஞன் மீது தாக்குதல் நடாத்திய படையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 

எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளதாக தாக்குதலுக்குள்ளான இளைஞன் தெரிவித்துள்ளார் .இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில் , மாங்குளம் ஒட்டங்குளம் பொன்நகர் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் தனுசன் வயது 20 

கடந்த வாரம் தனது ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டுக்கு சென்றபோது அங்கிருந்த படையினர் குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தியதுடன் கைத் தொலைபேசியையும் எடுத்துச் சென்றிருந்தனர். 

இதனையடுத்து படையினர் குறித்த இளைஞனை மாலை மாங்குளம் வன இலகா பிரிவினரிடம் ஒப்படைத்தனர். படையினரின் தாக்குதல் காரணமாக காயங்களுக்குள்ளான இளைஞன் மருத்துவப்பரிசோதனை மேற்கொள்வதற்காக 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . இதையடுத்து மல்லாவி பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தனது ஆடுகளைக்காணவில்லை அதனை தேடிச் சென்றபோது படையினர் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக 

முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றது . இந்நிலையில் கள விசாரணைகளை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் எம் . ஆர் . பிரியதர்சன மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர் . எல். வசந்தராசா ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற 

இடத்திற்குச் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதலுக்குள்ளான இளைஞனிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டனர்.இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 

எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.