வடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வூதியம், அல்லது விசேட மருத்துவ பரிசோதனை..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வூதியம், அல்லது விசேட மருத்துவ பரிசோதனை..!

வடமாகாண கல்வியமைச்சின் கீழ் உள்ள பாசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட 184 ஆசிரியர்களை விசேட மருத்துவ குழுவின் முன் பரிசோதிக்க மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கின்றது. 

மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் உள்ள 184 ஆசிரியர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் தொடர்பாக கல்வியமைச்சுக்கு நெருக்கடிகள் எழுந்துள்ளது. 

இந்நிலையில் சுய விருப்பின் பெயரில் ஓய்வுபெற விரும்புகிறவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதுடன், ஏனைய ஆசிரியர்களை அமைச்சு நியமிக்கும் விசேட மருத்துவர் குழு முன்பாக பரிசோதனைக்குட்படுத்து அதன் முடிவுகளின் அடிப்படையில் 

அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தற்போது ஆளுநரின் ஒப்புலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு