SuperTopAds

சாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை..! தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..

ஆசிரியர் - Editor I
சாள்ஸ் நிர்மலநாதனின் வாகனத்தை வழிமறித்த இராணுவம் தீவிர சோதனை..! தேர்தல் ஆணைக்குழு தலையீட்டால் 30 நிமிடங்களின் பின் இராணுவம் பின்வாங்கியது..

கோப்புபடம்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வேட்பாளருமான சாள்ஸ் நிர்மலநாதனின் வாகனம் நிறுத்தப்பட்டு தீவிரமாக சோதனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் வகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சோதனை நடவடிக்கை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதி ஊடாக குறித்த வாகனம் பயணித்த சமயம் வழி மறித்த இராணுவத்தினர் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். அதன்போது வாகனத்தில் அடையாள அட்டை அளவைக்கொண்ட வேட்பாளரின் படம் பொறிக்கப்பட்ட காட் காணப்பட்டுள்ளது. அதனை எடுத்துச் செல்ல முடியாது என இராணுவத்தினர் வாகனத்தை மறித்துள்ளனர்.

சுவரொட்டிகள் மற்றும் பனர்களே வைத்திருக்க முடியாது. இதுபோன்ற சிறிய காட்கள் கொண்டு செல்ல முடியும் எனத் தெரிவித்தபோதும் படையினர் செவிசாய்க்கவில்லை. இதனால் குறித்த விடயம் உடனடியாக பொலிசார் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்த நிலையில் பொக்கேற் சைஸ் அட்டை எனில் எடுத்துச் செல்ல முடியும் அதேநேரம் அதனை பொலிசாரே கோர முடியும் இராணுவம் கோரமுடியாது என ஆணைக்குழுவும் அழுத்தமாக தெரிவித்தது. இந்த நிலையில் 30 நிமிட தடையின் பின்னர் வாகனத்தை தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.