தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் வென்றார் சுரேஸ் சுப்ரமணியம்!

ஆசிரியர் - Admin
தேசிய ஒலிம்பிக் குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் வென்றார் சுரேஸ் சுப்ரமணியம்!

ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று நடைபெற்ற தேசிய ஒலிம்பிக் குழுத் தேர்தலில் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக சுரேஸ் சுப்ரமணியம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இவர் இலங்கை டெனிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும், ஆசிய டெனிஸ் சங்கத்தின் தற்போதைய பிரதி தலைவராகவும் கடமையாற்றுகிறார். 

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்காக சுரேஸ் சுப்பிரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிட்டிருந்தனர். இதேவேளை, தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளராக மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவாகியுள்ளார்.