சுதந்திரபுரத்தில் மனித எலும்பு எச்சங்கள்!- நாளை அகழ்வு
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இதையடுத்து, நாளை நீதிமன்றத்தின் அனுமதியுடன், அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாற்பது ஏக்கர் கொண்ட இக்காணியை, நேற்று கனரக இயந்திரத்தைக் கொண்டு துப்புரவு செய்யும் போது, மனித எலும்பு எச்சங்கள் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.