கிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு உச்ச பாதுகாப்பு..! ஈஸ்டர் தீவிரவாதிகளைபோன்ற தோற்றத்தில் நடமாடியவரால் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அச்சம்..

ஆசிரியர் - Editor
கிறிஸ்த்தவ தேவாலயங்களுக்கு உச்ச பாதுகாப்பு..! ஈஸ்டர் தீவிரவாதிகளைபோன்ற தோற்றத்தில் நடமாடியவரால் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அச்சம்..

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போல் தோளில் பை மற்றும் கையில் பையுடன் மன்னார் பேசாலையில் உள்ள தேவாலயம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. 

பேசாலை உள்ள தேவாலயம் ஒன்றில் நேற்று சனிக்கிழமை மாலை இனந்தெரியாத நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் மன்றாட்டம் செய்துள்ளார். அவரது முதுகில் பை ஒன்றும் கையில் பை ஒன்றும் காணப்பட்டுள்ளது. 

அந்த நபர், தேவாலயப் பகுதியில் இருந்த வயோதிபப் பெண் ஒருவரை அணுகி, தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் ஆராதணை தொடர்பிலும் வருபவர்கள் தொடர்பிலும் கேட்டுள்ளார். அவர் தொடர்பில் சந்தேகம் கொண்ட வயோதிப்பெண், 

தேவாலயத்தின் பங்குத் தந்தையிடம் விடயத்தைக் கூறியுள்ளார்.சம்பவம் தொடர்பில் இராணுவத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் அந்த நபர் பேசாலை உள்ள தங்குமிட விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். 

என்று அறிந்துகொண்டனர். அந்த விடுதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தேடப்படும் நபர் நேற்று மாலை 3 மணிநேரம் தங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வழங்கியதாகவும் பின்னர் வெளியேறிவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்தச் சம்பவத்தையடுத்து வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் இன்றைய ஞாயிறு ஆராதனையின் போது இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால் 

மேலதிக விவரங்களை வழங்க பொலிஸார் மறுத்துள்ளனர்.இதேவேளை, இன்றைய ஆராதனையின் போது இராணுவத்தினர் தேவாலயத்தின் வெளிப்புறத்தில் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்று மறைமாவட்ட ஆயர்களால் பங்குத் தந்தைகளுக்கு நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ளது.