SuperTopAds

தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகிவிட்டு அந்த மாத ஊதியத்தையும் பெற்ற வேட்பாளர்..! திரும்ப பெறுமாறு அமைச்சு பணிப்பு..

ஆசிரியர் - Editor I
தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகிவிட்டு அந்த மாத ஊதியத்தையும் பெற்ற வேட்பாளர்..! திரும்ப பெறுமாறு அமைச்சு பணிப்பு..

தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகுவதை அறிவித்துவிட்டு அந்த மாதம் அரச ஊதியத்தையும் பெற்ற வேட்பாளர் ஒருவரிடமிருந்து அந்த மாத ஊதியத்தை மீள பெற்றுக் கொள்ளுமாறு கால்நடை சுகாதார திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. 

கால்நடை சுகாதார திணைக்களத்தில் பணியாற்றிய கால்நடை மருத்துவர் ஒருவர் மார்ச் மாதம் 5ம் திகதி தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவிலிருந்து விலகும் அறிவித்தல் கடிதத்தை வழங்கியிருக்கின்றார். எனினும் அதற்கான ஒப்புதல் திணைக்களத்தால் வழங்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் கூறுகின்றன. 

மார்ச் மாதம் 19ம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் மார்ச் மாதம் 5ம் திகதி குறித்த கால்நடை மருத்துவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகும் அறிவிப்பை கொடுத்ததுடன், மார்ச் மாதத்திற்கான ஊதியத்தையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார். 

இந்த விடயம் தொடர்பாக மாகாண கால்நடை சுகாதார திணைக்களம் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த வேட்பாளர் பெற்றுக் கொண்ட மார்ச் மாதத்திற்கான ஊதியத்தை திரும்ப பெறுமாறு அமைச்சு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருக்கின்றது.