காணாமல்போனவர்கள் மரணித்திருக்கலாம்..! பிரதமர் மஹிந்த தமிழ் ஊடக பிரதானிகளிடம்..

ஆசிரியர் - Editor
காணாமல்போனவர்கள் மரணித்திருக்கலாம்..! பிரதமர் மஹிந்த தமிழ் ஊடக பிரதானிகளிடம்..

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இல்லை என்றே கருதவேண்டியிருக்கின்றது. என தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார். 

இன்று காலை அலரி மாளிகையில் தமிழ் ஊடக பிரதானிகளுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் கூறுகையில், 

காணாமல்போனவர்கள் நீண்டகாலமாகியும் திரும்பவில்லை என்றாலோ, அல்லது உலகில் எந்த பகுதியிலும் அவர்கள் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்திருக்கலாம் என்றே அர்த்தம்.என பிரதமர் கூறியுள்ளார்.