கேப்பாபிலவில் 25 வயது இளைஞன் நேற்று இரவு கைது..! தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor
கேப்பாபிலவில் 25 வயது இளைஞன் நேற்று இரவு கைது..! தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு..

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு 25 வயதான இளைஞன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளான். 

முல்லைத்தீவு- கேப்பாபிலவு கிராமத்தை சேர்ந்த நவரத்தினம் டிலக்சன் என்ற இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு இளைஞனின் வீட்டுக்கு சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர், 

கைது செய்வதற்கான ஆவணத்தை வழங்கி, கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Radio