தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சி..! 1 மாதத்தில் 17 வயது சிறுவன் உட்பட 22 பேர் சத்தமில்லாமல் கைது, அதிர்ச்சி சம்பவம் அம்பலம்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சி..! 1 மாதத்தில் 17 வயது சிறுவன் உட்பட 22 பேர் சத்தமில்லாமல் கைது, அதிர்ச்சி சம்பவம் அம்பலம்..

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த மாதம் மட்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் 22 பேர் சத்தமில்லாமல் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த 22 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விடயம் வெளிவந்துள்ளதாக கூறப்படுகின்றது. 

தேர்தல் காலத்தில் மிகவும் இரகசியமாக இடம்பெறும் இந்தக் கைதுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. கைதானவர்களில் சிலர் கிளிநொச்சியிலுள்ள 

பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். சிலர் விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள உருவாக்க முயற்சிக்கின்றனர் 

என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் மட்டும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையோடு மாதம் முழுமையாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவுகளால் முறையிடப்பட்டுள்ளது.

அனைவரும் ஒரே குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர் என ஜூன் மாதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 பேரில் ஒருவர் 17 வயதுச் சிறுவன் என பெற்றோரினால் பிறப்புச் சான்றிதழ் ஆதாரத்துடன் மனித உரிமை ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட எவர் தொடர்பிலும் இதுவரை எந்த நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு