கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

60 வயதான முதியவர் மீது கத்திக்குத்து..! இராணுவ முகாமில் உதவிகேட்ட நிலையில் காப்பாற்ற இராணுவம் முயற்சித்தும் பயனில்லை..

ஆசிரியர் - Editor
60 வயதான முதியவர் மீது கத்திக்குத்து..! இராணுவ முகாமில் உதவிகேட்ட நிலையில் காப்பாற்ற இராணுவம் முயற்சித்தும் பயனில்லை..

திருகோணமலை கல்லடி மீன்வாடியில் இருவருக்கிடையில் வாய்த்தர்க்கம் முற்றி கத்திக்குத்தில் முடிந்த நிலையில் புத்தளத்தை சேர்ந்த 60 வயதான முதியவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 

கொலை செய்த நபர் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்குள் புகுந்துள்ளதுடன், கொலை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவித்துள்ளார். இதன் பின்னர் அந்நபரை இராணுவத்தினர் 

சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உடப்பு – தானஞ்சோலை, 05 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 49 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Radio
×