கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கொரோனா தொற்று: முதியவரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிள்ளைகள்!! -மாடியிலிருந்து குதித்து தற்கொலை-

ஆசிரியர் - Editor II
கொரோனா தொற்று: முதியவரை வீட்டை விட்டு வெளியேற்றிய பிள்ளைகள்!! -மாடியிலிருந்து குதித்து தற்கொலை-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பால் மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மதுரை முழுவதும் 30ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடதக்கது.

மதுரையில் கொரோனா அறிகுறியுடன் இருந்த முதியவரை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிள்ளைகள்; சாலையில் சுற்றித்திரிந்தவரை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

கொரோனா உறுதியானதால் தனியார் கல்லூரி முகாமில் சிகிச்சைபெற்று வந்தார். மனமுடைந்த முதியவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Radio
×