கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

படப்பிடிப்பு இல்லை!! -கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்-

ஆசிரியர் - Editor II
படப்பிடிப்பு இல்லை!! -கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்-

கொரோனா வைரசால் அமுல் படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தினால் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார்.

ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், சினிமா துறையும், சினிமா கலைஞர்களும் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிய வந்துள்ளது. 

மராத்தி நடிகரான ரோஹன் பெட்னேக்கர் என்பவர், மராத்தியில் சூப்பர் ஹிட் அடித்த பாபாசாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்து பிரபலமானார்.

இவர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சிட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதால், கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார். மீண்டும் எப்போது நடிக்கும் வேலை வரும் என தெரியவில்லை, என் அப்பா இந்த வேலையை செய்தார். அதனால் எனக்கு இதில் கொஞ்சம் புரிதல் இருக்கிறது. இந்த வேலையை எனக்கு எந்த அவமானமும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.

Radio
×