SuperTopAds

சுகாதார அமைச்சின் 12 அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு யாழ்.வருகை..! கலக்கத்தில் வடக்கு சுகாதார அதிகாரிகள்..

ஆசிரியர் - Editor I
சுகாதார அமைச்சின் 12 அதிகாரிகள் கொண்ட விசாரணை குழு யாழ்.வருகை..! கலக்கத்தில் வடக்கு சுகாதார அதிகாரிகள்..

மத்திய சுகாதார அமைச்சிலிருந்து 12 பேர் கொண்ட குழு யாழ்.மாவட்டத்திற்கு வந்துள்ளதுடன் பல வைத்தியசாலைகளுக்கு சென்று ஆய்வுகளை நடத்தவுள்ளதாக தொியவருகின்றது. 

யாழ்.மாவட்டத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் காணப்படும் முறைகேடுகள், குறைபாடுகள் தொடர்பான முறைப்பாடு 

மத்திய சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிலையில் அது குறித்து ஆராய்வதற்காகவே மத்திய சுகாதார அமைச்சிலிருந்து இந்த குழு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக அண்மையில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இடமாற்றம் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இடமாற்றம் 

தொடர்பில் தேர்தல் ஆணைக்குழ விடுத்த அறிவுறுத்தல் தொடர்பிலும் குறித்த குழு கவனத்தைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.