SuperTopAds

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 2416 குடும்பங்கள் பாதிப்பு

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியால் 2416 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சி பதிவாகியுள்ளதால் 2416 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான குடிநீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வறட்சியான நிலை காரணமாக வெலிஓயா மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களில் இருந்து அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

வெலிஓயா பிரதேசத்தில்  430 குடும்பங்களை சேர்ந்த 1540 அங்கத்தவர்களும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1986 கடும்பங்களை சேர்ந்த 6398 அங்கத்தவர்களும்   வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன இவர்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன 

இவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு 5 இலட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் வெலி ஓயா பிரதேசத்திற்கு மூன்று இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரதேச சபை ஊடாக நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் ஏப்பரல் மாத்தில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு பிரதேசங்களில் மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளகாரணத்தினால் நீர் பற்றாக்குறை ஏற்படவில்லை என்றும் தொடர்ச்சியாக மேலதிகமான நீதி ஒதுக்கீட்டினை அனர்த்த முகாமைத்து நிவாரணை சேவைகள் நிலையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.