வில்பத்து காடழிப்பு - றிஷாத்துக்கு எதிரான வழக்கில் ஜூலை 31 இல் தீர்ப்பு!
வில்பத்து காடழிப்பு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜூலை 31ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், அறிவித்துள்ளது.
மன்னார்- மறிச்சுக்கட்டி வனப் பகுதியில், காடுகளை அழித்து, சுமார் 1000 வீடுகளை கட்டும், திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக, சுற்றுச்சூழல் நீதி மையம் என்ற அமைப்பு, ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனக டி சில்வா, நிசங்க பந்துல கருணாரத்ன ஆகியோர், முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எதிர்மனுதாரர்களாக முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை, வனவளத் திணைக்களம் உள்ளிட்ட தரப்புகள் இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மேற்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், எதிர்வரும், ஜூலை 31ஆம் திகதி தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.