கருணா கைது செய்யப்படலாம்..! தெற்கில் வலுக்கும் எதிர்ப்பு. விசாரணைக்கு உத்தரவு, என்னை கைது செய்ய முடியாது என கருணா இறுமாப்பு..

ஆசிரியர் - Editor I
கருணா கைது செய்யப்படலாம்..! தெற்கில் வலுக்கும் எதிர்ப்பு. விசாரணைக்கு உத்தரவு, என்னை கைது செய்ய முடியாது என கருணா இறுமாப்பு..

ஆனையிறவு சமரில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் அப்போது கட்டளை தளபதியாக இருந்த தாம் 3000 படையினரை கொன்றதாக கூறிய கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணைக்குட்படுத்த பணிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணிப்பை பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கியுள்ளார். இந்நிலையில் கருணா கைது செய்யப்படலாம் என கருத்துகள் எழுந்துள்ளது. மேலும் பௌத்த அமைப்புக்களும், சிங்கள அமைப்புக்களும் 

கருணா கைது செய்யப்படவேண்டும். என போர்கொடி துாக்கியுள்ளன. இந்நிலையில் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு கருத்து தொிவித்த கருணா என்னை கைது செய்ய முடியாது. நான் என்ன கூறினேனோ அதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளேன். 

என்னை கைது செய்யுமாறு கூறியவர்கள் எவரும் யோக்கியர்கள் கிடையாது. என தெரிவித்துள்ளார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு