SuperTopAds

நிறை மதுபோதையில் வனவள திணைக்கள அதிகாரிகள் அட்டகாசம்..! அறை ஒன்றில் இளைஞர்களை அடைத்துவைத்து தாக்குதல், முறைப்பாடு பெற பொலிஸ் பின்னடிப்பு..

ஆசிரியர் - Editor I
நிறை மதுபோதையில் வனவள திணைக்கள அதிகாரிகள் அட்டகாசம்..! அறை ஒன்றில் இளைஞர்களை அடைத்துவைத்து தாக்குதல், முறைப்பாடு பெற பொலிஸ் பின்னடிப்பு..

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் மதுபோதையில் வனவள திணைக்கள அதிகாரிகள் மணல் ஏற்றிச் சென்ற பொதுமகன்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடாத்தியுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் நேற்று மாலை பேராறு பகுதியில் வீதியில் மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் ஒன்றை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் மறித்து சோதனையிட்டபோது 

அவர்கள் மதுபோதையில் நின்றதோடு அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் குறித்த டிப்பர் வாகன உரிமையாளர் குறித்த இடத்திலிருந்து வாகனத்தை ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு 

எடுத்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில் குறித்த அதிகாரிகள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் வருகை தந்து பொலிஸாரிடம் தாங்கள் வன பரிபாலன திணைக்களம் என தெரிவித்து 

குறித்த வாகனத்தை தாம் கொண்டு சென்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் சாரதியையும் உரிமையாளரையும் கைது செய்வதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து முள்ளியவளையில் 

அமைந்திருக்கின்ற முல்லைதீவு வட்டார வன காரியாலய அலுவலகத்திற்கு டிப்பர் வாகனைத்தை எடுத்துச் செல்வதற்காக கோரியுள்ளனர். இந்நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  

குறித்த அலுவலர்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சாரதியையும் உரிமையாளரையும் வன பரிபாலன அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஏற்றியதோடு 

வாகனத்தை அலுவலகத்துக்கு கொண்டுவர வாகன உரிமையாளர் உடைய உறவினர் ஒருவரையும் போலீசார் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் குறித்த வாகனத்தை செலுத்தி சென்ற நபர் 

முள்ளியவளையில் அமைந்துள்ள முல்லைதீவு வட்டார வன காரியாலயத்தில் குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திய பின்னர் அவரை மது போதையில் நின்ற ஒரு அதிகாரி அலுவலகத்திற்கு உள்ளே 

அழைத்துச் சென்று அறையில் அடைத்துவைத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தன்னை அழைத்துச் செல்வதற்காகவும் தன்னை பார்வையிடுவதற்காகவும் வருகை தந்த தன்னுடைய தம்பி 

மற்றும் நண்பர் இருவருக்கும் அவர்களையும் அறைக்குள் வைத்து அடித்ததாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பாதிக்கப்பட்ட நபர்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் 

முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்கள் குறித்த இளைஞர்கள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஒரு அரச அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அரசு அதிகாரிகள் மதுபோதையில் நின்று 

தம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்இவர்கள் தாக்கப்பட்ட நிலையில் குறித்த அலுவலகத்துக்கு முன்னாள் இளைஞர்கள் ஒன்று கூடியபோது போலீசார் வருகைதந்து 

அவர்களை அவ்விடத்தைவிட்டு அகற்றியதோடு குறித்த நபர்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கோரி இருந்தனர். இருப்பினும் குறித்த இளைஞர்கள் தாங்கள் யாரும் 

மது போதையில் இல்லை எனவும் அதிகாரிகள் மதுபோதையில் இருக்கின்றார்கள் அதனை சோதனை செய்து அவர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரை கோரிய போதும் போலீசார் 

அந்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள முடியாது என தெரிவித்திருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் மூவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததோடு 

அந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக 

முள்ளியவளை போலீசார் தெரிவித்தனர். இதேவேளை நேற்று இரவு வன பரிபாலன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் டிப்பர் வாகனம் நீதிமன்றில் முற்படுத்தப்படட நிலையில் 

நபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வாகனமும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.