இலங்கையின் முதலாவது கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம்
இலங்கையின் முதலாவது கடலுக்கு அடியிலான அருங்காட்சியகம், கடற்படையினரால் காலியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா திறந்து வைத்திருந்தார்.
உள்நாட்டு , வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், கடற்படையினரால் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் 50 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தைப் போல திருகோணமலை மற்றும் தங்காலையில் மேலும் இரு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.