புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் எதுவித பயனும் இல்லாமல் காணப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரண்டு தொலைத்தொடர்பு கோபுரங்கள் எதவித பயன்களும் அற்ற நிலையில் நீண்டகாலமக காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பல கிராமங்களில் தொலைத்தொடர்பாடல்களில் அலைவரிசை சீரின்மையால் மக்கள் முழுமையான தொலைத்தொடர்பு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது
குறிப்பாக சுதந்திரபுரம்,உடையார்கட்டு,இருட்டுமடு.குரவில்,தேராவில்,மூங்கிலாறு, மாணிக்கபுரம், இளங்கோபுரம், விசுவமடு மேற்கு,உள்ளிட்ட கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை தொலைபேசி ஊடாக கூட தொடரமுடியாத நிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்திலும்,உடையார் கட்டு வடக்கிலும்,மூங்கிலாற்று பகுதியிலும் தொலைத்தொடர்பு சேவைக்காக பொருத்தப்பட்ட கோபுரங்கள் இன்றும் வெறுமையாக காணப்படுகின்றன இவற்றில் இருந்து மக்களுக்கான எதுவித செவைகளும் இடம்பெறவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
மக்களின் தேவைக்காக பொருத்தப்பட்ட கோபுரங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரேனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் மாணவர்கள் இணையவளி கல்வியினை கூட பெற்றுக்கொள்ள மடியாத நிலை காணப்படுவதாக பாதிக்கப்பட்ட கிராம பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
இத தொடர்பில் உரிய தொலைத்தொடர்பு கோபுரங்களின் உரிமம் பெற்றுள்ள தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கடந்த காலத்தில் குறித்த கோபரங்கள் 5G அலைவரிசையினை பொருத்துவதாக எதிர்பினை வெளியிட்டுளதை தொடர்ந்து இந்த கோபுரங்களில் பொருத்தப்பட்ட கருவிகள் கழற்றப்பட்டு தற்போதும் கோபுரங்கள் வெறுமென காட்சியளிக்கின்றன.