SuperTopAds

ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு!! -கொரோனாவே காரணம்-

ஆசிரியர் - Editor III
ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு!! -கொரோனாவே காரணம்-

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் நிகழ்ச்சிகள் இரண்டு மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விருது விழா ஆரம்பிக்கப்பட்ட 40 வருடங்களில் நிகழ்வு தள்ளிவைக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். 

உலக அளவில் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஆஸ்கரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், 93 ஆவது ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவதாக இருந்ததது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆஸ்கர் வரலாற்றிலேயே நிகழ்ச்சிக்கான தேதிகள் மாற்றியமைக்கப்பட்டது இது 4-வது முறையாகும்.

இதற்கு முன்னதாக 1938 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் ஏற்பட்ட வெள்ளம், 1968 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்டது, 1981 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரோனல்டு ரேகன் கொல்லப்பட்டது ஆகிய மூன்று 

காரணங்களுக்காக மட்டுமே ஆஸ்கர் நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

தற்போது வரலாற்றிலேயே நான்காவது முறையாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்கர் நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.