வடமாகாண மக்களே அவதானம்..! கொரோனா 2ம் அலை தாக்கவுள்ளது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்களே அவதானம்..! கொரோனா 2ம் அலை தாக்கவுள்ளது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை..

கடல்வழியாக வடமாகாணத்துக்குள் நுழையும் இந்தியர்களால் கொரோனா 2ம் அலையின் தாக்கம் உருவாகும். என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

இது தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா கூறுகையில், இலங்கையில் கொரோனா 1வது அலையில் தொற்றுக்குள்ளானவர்கள்

உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்கள் தொடர்பான தகவல்களே தொியாத நிலையில் எப்படி அவர்களை தனிமைப்படுத்துவது?

குறிப்பாக இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இவ்வாறான நிலையில் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் நுழைபவர்களால் ஆபத்து உருவாகும்.

குறிப்பாக வடக்குமாகாணத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் ஏற்படவுள்ளது. இதனை தடுப்பதற்கு சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை கட்டுப்படுத்தவேண்டும். 

இல்லையேல் வடமாகாணம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக நாடே ஆபத்தை எதிர்கொள்ளும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு