வடக்கை இலக்குவைக்கும் ஜனாதிபதி செயலணி..! தமிழர் மரபுரிமை அபகரிக்கப்படும் ஆபத்து..

ஆசிரியர் - Editor I
வடக்கை இலக்குவைக்கும் ஜனாதிபதி செயலணி..! தமிழர் மரபுரிமை அபகரிக்கப்படும் ஆபத்து..

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மற்றும் மரபுரிமை சொத்துக்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு வடக்கில் உள்ள மரபுரிமை சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்படவேண்டும். 

மேற்படி கோரிக்கையினை ஜனாதிபதிக்கு முன்வைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவின் தலைமையில் இந்த வாரம் கூடும் செயலணிக் கூட்டத்தில் 

இந்த விடயம் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நியமித்த விசேட ஜனாதிபதி செயலணி கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை முற்றுமுழுதாக கண்காணித்து அவற்றை பாதுகாக்க 

நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் கடந்த செயலணிக் கூட்டத்தில் அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் செயலணியிடமே சகல அதிகாரங்களும் ஒப்படைக்கப்படடுள்ளன. 

இந்நிலையில் தற்போது செயலணியின் பார்வை வடக்கு நோக்கி திரும்பியுள்ளது. வடக்கில் நாக விகாரை மற்றும் சில பகுதிகளிலும் தொல்பொருள் பிரதேசங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் 

ஆகவே அனுராதபுரம் தூபராம விகாரை தொடக்கம் நாக விகாரை வரையில் சகல பகுதிகளையும் பாதுகாத்து நாட்டின் பாரம்பரியத்தை தக்கவைக்க வேண்டும் எனவும் செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு