திடீரென காணாமல்போன 11வயது சிறுவன், கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!
புதுக்குடியிருப்பு- தேவிபுரம் பகுதியில் வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றும் தேவிபுரம் (அ) பகுதியை சேர்ந்த 11 வயதான வ.வினுஜன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என உறவினர்களின் உதவியோடு தேடியபோது
கிணற்றுக்குள் விழுந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை உறவினர்களின் உதவியோடு மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து சென்றபோதும்
சிறுவன் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.