SuperTopAds

ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி விவகாரத்தினை கையில் எடுத்த ஸ்ரீதரன்!

ஆசிரியர் - Admin
ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி விவகாரத்தினை கையில் எடுத்த ஸ்ரீதரன்!

ஆனைவிழுந்தான் பிரதேச மக்களின் வயல்காணி விவகாரத்தினை இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களுடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளரும் மற்றும் உறுப்பினரான ஜீவராசா அவர்களும் நேரடியாகச் சென்று மக்களிடம் பிரச்சனை தொடர்பாக பேசப்பட்டது.

குறித்த பகுதியில் 1984ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட மக்களிற்கு தலா இரண்டு ஏக்கர் நெற்செய்கை காணியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு அப்போதைய அரசாங்கத்தினால் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்டு வந்த மக்களால் தொடர்ந்து இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக காணியை பராமரிக்க முடியாது போயுள்ளது. இந்த நிலையில் குறித்த காணி பெரும் மரங்கள் வளர்ந்து காணப்படும் நிலையில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் உரிமை கோரப்பட்டு கிராம மக்களுக்கு இடையூறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று அக்கிராம மக்களினால் தெரிவிக்கப்பட்டது.

குறித்த காணியில் வன பகுதி என காண்பிக்கப்படும் பகுதிகளில் நீர்ப்பாசனம் செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் அங்கு காணப்படும் நிலையில் குறித்த காணியை விடுவிக்காது வனவள பாதுகாப்பு திணைக்களம் செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி சந்திப்பில் எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் அவர்களால் பேசப்பட்டு அதுதொடர்பான தீர்வு கிடைக்குமென உறுதியளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.