25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..! யாழ்.குருநகரில் இன்று சம்பவம்..

ஆசிரியர் - Editor I
25 லட்சம் ரூபாய் பண பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசியில் கூறிய பொய்யை நம்பி 90 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்..! யாழ்.குருநகரில் இன்று சம்பவம்..

யாழ்.குருநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் 25 லட்சம் ரூபாய் பண பரிசு கிடைத்துள்ளதாக தொலைபேசியில் கூறிய கதையை நம்பி 90 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்திருக்கின்றார். 

இன்று நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.குருநகரில் உள்ள ஒருவரின் கைபேசிக்கு இன்றுகாலை அழைப்பொன்று வந்தது. 

அதில் பேசியவர்கள் தங்களை தொலை பேசி நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். 

உங்களுக்கு 25 லட்சம் ரூபா பரிசு விழுந்துள்ளது என்று தெரிவித்தனர். "உங்களின் 'சிம்' முன்னர் இன் னொரு நபரின் பெயரில் (அவரது பெயரையும் சரியாகக்கூறி) இருந்தது, 

இப்போது அது உங்களின் பெய ரில் மாற்றப்பட்டுள்ளது என்று அவர்கள் சரியாகக் கூறினார்கள். உங்களுக்கு பரிசில் விழுந்துள்ளது என்றனர். 

அதனால் நான் உண்மை என்று நம்பினேன்” என்கிறார் பாதிக்கப்பட்டவர் அழைப்பு எடுத்தவர்கள், பரிசுத் தொகைக்கான வரி ஒரு லட்சம் ரூபா, 

அதை நீங்கள் உடனே செலுத்தினால் பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர். அதை நம்பியவர் பணத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் 

செய்துள்ளார். அழைப்பு எடுத்தவர்கள் பலகைபேசி இலக்கங்களைக் கொடுத்து, "ஈஸி காஸ்” மூலம் பணத்தைச் செலுத்து மாறு கூறியுள்ளனர். 

பணத்தை சிறு சிறு தொகையாக அனுப்புமாறும் தெரிவித்துள்ளனர். அதை யடுத்து அந்த இலக்கங்களுக்கு 5 ஆயிரம் ரூபா, 4 ஆயிரம் ரூபா என மொத்த மாக 90 ஆயிரம் ரூபா 

செலுத்தப் பட்டுள்ளது. அதன்பின்னர் அழைப்பெடுத்த இலக்கங்களும்,ஏனைய இலக்கங்களுக்கும் அழைப்பு எடுத்தபோது அவை உபயோகத்தில் இருக்கவில்லை. 

அதன்பின்னரே தாம் ஏமாற்றப் பட்ட விடயம் பாதிக்கப்பட்ட நபருக்குத் தெரிந்துள்ளது. "நாங்கள் உடனடியாக யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த தொலைபேசிப் பரிவர்த்தனை 

நிறுவனத்துக்குச் சென்றோம். அவர்கள் இது தொடர்பாகப் பொலிஸாரிடம் தான் முறைப்பாடு செய்ய முடி யும்” என்று தெரிவித்தனர் என்றார் பாதிக்கப்பட்டவர். 

"அதன்பின்னர் முறைப்பாடு செய்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்றோம். இது போன்ற வழக்குகள் பல உள்ளன, இது தொடர்பாக முறைப்பாடு செய்தும் பயனில்லை. 

நீங்கள்தான் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுரைகள் கூறி அனுப்பினார்கள்” என்றும் பாதிக் கப்பட்டவர் தெரிவித்தார். 

வடக்கில் இவ்வாறான மோசடிகள் முன்னரும் நடந்துள்ளன. தொலை பேசி அழைப்புக்கள் மூலமும், குறுந்தகவல்கள் மூலமும் பெருந் தொகைப் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளன. 

வடமராட்சியில் உள்ள குடும்பம் ஒன்றிடம் குறுந்த கவல் சுமார் 30 லட்சம் ரூபா இவ்வாறு மோசடி செய்யப்பட்டிருந்தது. அவர்கள் வங்கிக் கணக்குக்குப் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர். 

அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு