ஆசிய மட்டத்தில் முதலிடம்: மாணவியின் சாதனைக்கு வடமாகாண முதலமைச்சர் புகழாரம்

ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவி தர்சிகா நகரங்களிலிருந்து வெகுதொலைவிலுள்ள பாண்டியன்குளம் கிராமத்திலிருந்து சென்று சாதனை படைத்துள்ளார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஆசிய பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முல்லைத்தீவு பாண்டியன்குளம் மகா வித்தியாலய மாணவி தேவராசா தர்சிகா 48 கிலோகிராம் பளுதூக்கும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதனை முன்னிட்டு மாணவிக்கான கௌரவிப்பு நிகழ்வில்
பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் மேலும் கூறுகையில், நகரங்களிலிருந்து மிக நீண்டதூரத்தில் உள்ள போதிய வசதிகள் இல்லாத பாண்டியன்குளம் கிராமத்தில் இருந்து அயராத உழைப்பின் மூலம் ஆசிய மட்டத்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தர்சிகா சாதனை படைத்துள்ளமையானது, பாண்டியன்குளம் குறித்த பாடசாலையில் கல்வி கற்பித்து வருகின்ற உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் பிரதீபனின் உழைப்பின் உன்னதமேயென பாராட்டினார்,